Categories
உலக செய்திகள்

டிரம்ப் எடுத்த முடிவு…!! ”இந்தியருக்கு பொறுப்பு” குவியும் பாராட்டு …!!

தேசிய அறிவியல் வாரியத்திற்கு உறுப்பினராக இந்திய அமெரிக்கரை அதிபர் டிரம்ப்  நியமித்துள்ளார்.

அமெரிக்காவின் தேசிய அறிவியல் வாரியத்திற்கு இந்திய அமெரிக்கரான சுதர்சனம் பாபு என்பவரை உறுப்பினராக அதிபர் டிரம்ப் நியமியத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் 6 வருடங்கள் அப்பதவியில் நீடிக்க முடியும். 1986ஆம் ஆண்டு கோவையில் இருக்கும் பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்து, 1988ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஐஐடியில் முதுநிலை தொழில்நுட்பம் பிரிவில் பட்டம் பெற்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார் சுதர்சனம் பாபு.

அதுமட்டுமின்றி இன்டர்டிஸிப்ளினரி ரிசர்ச் மற்றும் கிராஜுவேட் கல்வியின்  பிரெடிசன் மைய இயக்குனராகவும் இருந்து வருகிறார். உலோக மற்றும் தயாரிப்பு பிரிவுகளில் 21 வருடம் அனுபவம் கொண்டவர் சுதர்சனம் பாபு.  அமெரிக்க அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக இருப்பதில் சுதர்சனம் பாபு மூன்றாவது இந்திய அமெரிக்கர் ஆவார். அவருக்கு முன்பு வெர்மோன்ட் பல்கலைக்கழகத்தின் சுரேஷ் வி. கரிமெல்லா, அரிசோனா பல்கலைக்கழகத்தின் சேதுராமன் பஞ்சநாதன் ஆகிய இருவரும் அமெரிக்க அறிவியல் வாரியத்தின் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

Categories

Tech |