Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvsAUS இறுதிப்போட்டி : உலக மகளிர் தினத்தில்… மகளிர் டி20 உலக கோப்பை யாருக்கு?

உலக மகளிர் தினமான இன்று உலக கோப்பை மகளிர் டி 20 போட்டியின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. 

மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 21 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இதில் A பிரிவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும், B பிரிவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து  அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.  நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகள் லீக் சுற்றின் முடிவில் வெளியேறியது. லீக் போட்டிகள் கடந்த 3ஆம் தேதியோடு முடிந்தன.

Image

அதன்பின் இங்கிலாந்து மற்றும் இந்திய அணி  அரையிறுதி போட்டியில் நேற்று முன்தினம் மோத இருந்த போது மழை குறுக்கிட்டதால், ஒரு பந்து கூட வீச முடியாத நிலை ஏற்பட்டது. ஆகவே லீக் சுற்றில் முதலிடம் பிடித்த இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான மற்றொரு அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Image

இந்த நிலையில் இன்று மெல்போர்ன் நகரில் நடைபெறும் மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.ஏற்கனவே  4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image

அதே நேரத்தில் லீக் சுற்றில் தோல்வியடைந்ததற்கு பதிலடியாக ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி 5ஆவது முறை கோப்பையை வெல்ல முனைப்பு காட்டி வருகிறது. ஆஸ்திரேலியா 6வது முறையாக இறுதி போட்டியில் விளையாடுகிறது. இன்று மகளிர் தினம் என்பதால் யார் கோப்பையை வெல்ல போகிறார்கள் என்று ஆவலாக இருக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 12: 50 மணிக்கு தொடங்குகிறது.

Image

இந்திய அணியை பொறுத்தவரை உலகத் தரவரிசையில் நம்பர் ஒன்  இடத்தில் இருக்கும் ‌இளம் புயல் ஷபாலி வர்மா  (4 ஆட்டத்தில் 161 ரன்கள் ) அதிரடி தாக்குதல் நடத்துவார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. பவுலிங்கிலும் அசத்தும்  ஷபாலி நல்ல பார்மில் இருக்கிறார்.

Image

அதேபோல கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, சுமிருதி மந்தனா, ஆகியோரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும் பந்து வீச்சில் பூனம் யாதவ், ஷிகா பாண்டே, ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஆகவே இவர்கள்  ஜொலித்தால் கோப்பை இந்தியாவுக்குத்தான்.

Image

ஆஸ்திரேலிய அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆம், மெக் லேனிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் பெத் மூனி 181 ரன்கள் மற்றும் அலைஷா ஹீலே 161 ரன்கள் விளாசியிருக்கின்றனர். இவர்களில் ஒருவர் நிலைத்து விட்டால் அவளவுதான். அதேபோல பவுலிங்கில் மேகன் ஷூட் 9 விக்கெட் மற்றும் ஜோனசென் போன்ற சிறந்த வீராங்கனைகள் இருக்கின்றனர். இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Image

இதனிடையே, நடப்பு தொடரில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்து வீராங்கனை மேகன் ஷூட் (வயது 22), ” பவர் பிளே” ஆட்டத்தில் இந்தியாவின் தொடக்க ஆட்ட வீராங்கனைகளான சுமிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மாவுக்கு பந்து வீச, தனக்கு விருப்பம் இல்லை என கூறி தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |