இந்திய அணியை தோற்கடிக்க வேண்டுமெனில், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என நியூசிலாந்து அணி வீரர் டாம் லாதம் கூறியுள்ளார் .
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் போட்டிகளில் நியூசிலாந்து அணி 1-0 கணக்கில் வெற்றியை கைப்பற்றியது. இதில் 2 வது டெஸ்ட் காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பங்கேற்காததால் அவருக்கு பதில் அணியில் டாம் லாதம் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் தலைமையில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. அத்துடன் 22 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தை அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது . இதனால் அடுத்து நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியையும் தோற்கடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து நியூசிலாந்து வீரர் டாம் லாதம் கூறும்போது, ” செட் ஆகிய பந்து வீச்சாளர்களை இந்திய அணி பெற்றுள்ளது. அதோடு சிறந்த பேட்ஸ்மேன்களும் அணியில் இடம்பெற்றுள்ளன. உலகில் எந்த இடத்திற்கு சென்றாலும் அவர்கள் ரன்களை குவித்துள்ளனர். கடந்த 2, 3 வருடங்களாகவே இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது . எனவே அவர்களை வீழ்த்த வேண்டுமெனில் நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும். இந்திய அணி முற்றிலும் மாறுபட்ட அணி என்பதால், அதற்காக எங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும் ” என்று அவர் கூறினார் .