இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ள ராகுல் டிராவிட்டுக்கு ரூபாய் 10 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது .
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிகாலம் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் முடிவடைகிறது. இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்படவுள்ளார் இந்த டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க உள்ளார் .அதோடு இதுவரை யாருக்கும் கொடுக்காத வகையில் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ள ராகுல் டிராவிட்டுக்கு ரூபாய் 10 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது .
அதேபோல் பந்து வீச்சு பயிற்சியாளரான பரத் அருணுக்கு பதிலாக மாம்ரே பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார் . இதனிடையே பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்று இருந்தது.இதில் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு அபய் சர்மா விண்ணப்பித்துள்ளார். 52 வயதான அபய் சர்மா இந்திய அணியில் ‘ஏ’ மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு பொறுப்பு வகித்துள்ளார் .மேலும் தேசிய மகளிர் அணிக்கும் அவரது பங்களிப்பு இருந்துள்ளது.