Categories
உலக செய்திகள்

இந்திய அணியிலிருந்து விலகும் முக்கிய வீரர்… அதிர்ச்சி…!!!

இந்திய அணியின் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்ஸில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. மேலும் இந்திய அணி புள்ளி 2-1 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் 4ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையே நடக்க உள்ளது . இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் தான் இந்தியா வெற்றி பெறுவதும் அல்லது ட்ரா செய்வதன் மூலம் பைனல்ஸ்க்கு  தகுதி பெறுமா என்று தெரியவரும்.

சென்னை அகமதாபாத் மைதானங்களில் கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சுழல்பந்து வீச்சாளர்கள் சாதகமாக இருந்த  நிலையில் இங்கிலாந்துக்கு  எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பும்ரா என்ற வேகப்பந்து வீச்சாளர் விலகுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டதால் தான் அணியிலிருந்து விடுவித்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்திய அணியில பும்ரா பதிலாக வேகப்பந்து வீச்சாளராக உமேஷ் யாதவ் அல்லது சிராஜ் இவர்களில் ஒருவர் அணியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றன

Categories

Tech |