இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 4-ம் தேதி தொடங்குகிறது .
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா , கவுண்டி கவுண்டி செலக்ட் லெவன் அணிகளுக்கு இடையேயான 3- வது நாள் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் கவுண்டி லெவன் அணிக்காக இந்திய அணியில் ஆல் ரவுண்டரான தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார் . இவர் 2-வது நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்தபோது வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்தானது இவருடைய கைவிரலில் தாக்கியது. இதனால் காயமடைந்த வாஷிங்டன் சுந்தர் கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இந்த காயத்தில் இருந்து அவர் குணமடைய குறைந்தது 5 வாரம் நீடிக்கும் என்பதால் அவர் அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதேபோல் இந்திய அணி வலைபயிற்சி பவுலர் அவேஷ்கான்-க்கு பெருவிரலில் காயம் ஏற்பட்டதால் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அவேஷ்கான் இருவரும் நாடு திரும்ப உள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.