இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான 2-ம்தர இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து நடந்த டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் 2-வது டி20 போட்டியின் போது இந்திய அணியின் ஆல்ரவுண்டரானா க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் போட்டி அடுத்த நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Just in: Yuzvendra Chahal and K Gowtham have tested positive for Covid-19 🏏
The two, along with Krunal Pandya and six other Indian cricketers, will stay back in Sri Lanka for the time being ⤵
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 30, 2021
இதனால் அவருடன் தொடர்பில் இருந்த வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.இந்நிலையில் இந்திய அணியின் சாஹல் , கிருஷ்ணப்பா கௌதம் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனால் இன்று நாடு திரும்ப இருந்த இந்திய அணி வீரர்கள் வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. எனவே வீரர்களின் தனிமை காலம் முடிந்த பிறகு இந்திய அணி நாடு திரும்புவார்கள் என்று பிசிசிஐ வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.