இந்திய அரசு மடகாஸ்கர் நாட்டிற்கு 5 ஆயிரம் டன் அரிசி வழங்கியிருக்கிறது.
மடகாஸ்கருக்கான இந்திய தூதராக இருக்கும் அபய் குமார், அந்நாட்டின் பிரதமரான கிறிஸ்டியன் என்ட்சேயுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரண்டு தரப்பிற்கான உறவில் உண்டான முன்னேற்றம் பற்றி இருவரும் ஆலோசித்திருக்கிறார்கள். அப்போது மனிதாபிமான அடிப்படையில் மடகாஸ்கர் நாட்டிற்கு, 5 ஆயிரம் டன் அரிசி இந்தியா சார்பாக வழங்கப்படும் என்று அபய் கூறினார்.
அதன்படி இந்தியா அனுப்பிய அரிசி டோமசினா என்ற துறைமுகத்திற்கு அடுத்த மாதம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகாஸ்கரில் கடும் வறட்சி ஏற்பட்டதில் மக்கள் பாதிப்படைந்தனர். எனவே, இந்தியா கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி அனுப்பியிருந்தது. மேலும் இம்மாதம் மூன்றாம் தேதி உலக மிதிவண்டிகள் தினத்தை முன்னிட்டு அந்நாட்டிற்கு 15,000 மிதிவண்டிகளையும் அனுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.