இரு நாட்டின் ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 2,600 கிலோ மாம்பழங்களை வங்காளதேச பிரதமர் அனுப்பி வைத்துள்ளார்.
இந்திய மற்றும் வங்காளதேசத்தின் நட்புறவை மேம்படுத்தும் விதமாக வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பிரதமர் நரேந்திர மோடிக்கு 2,600 கிலோ மாம்பழங்களை அனுப்பி வைத்தார். இந்த மாம்பழங்கள் 260 அட்டை பெட்டிகளில் அடைக்கப்பட்டு சரக்கு வாகனம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வங்காள துணை தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் முகமது சமியுல் காதர் இந்தியாவுக்கு வந்தடைந்த மாம்பழங்களை வரவேற்று ஒப்படைத்தார். மேலும் மிசோரம், திரிபுரா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில முதலமைச்சர்களுக்கும் மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.