தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, திரிப்புரா மாநிலம் அகர்தலா பகுதியில் எல்லை ராணுவப் படையினர் இன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஒரு பகுதியாக இந்திய-வங்கதேச எல்லைப் படை ராணுவத்தினர் அகவுரா ஒருங்கிணைந்த சோதனைப் பகுதியில் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இரு நாடும் நல்லுறவை மேம்படுத்த ஆண்டு தோறும் தேசிய நிகழ்ச்சியில் இதுபோல இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம்.
இது தொடர்பாக அகவுரா பிஜிபி முகாமின் நிறுவனத் தளபதி ஜஹாங்கீர் கூறியதாவது, “இனிப்புகளை பரிமாறிக் கொள்வதால் எல்லைப்பகுதியில் இரு நாட்டுக்கிடையேயும் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறையும்.
மேலும் பாரம்பரிய நடைமுறை, கலாச்சாரம், உள்ளிட்டவைக்காக இரு நாட்டு எல்லைப்பகுதியிலும் இனிப்புகளை பரிமாறுவது வழக்கம். இரு நாட்டு முக்கிய பண்டிகைகளுக்கும் இதேபோல்தான் நடைபெறும். தீபாவளிக்கான இனிப்புகளை பரிமாறிக் கொண்டு, பின்பு தீபாவளி வாழ்த்து தெரிவித்தோம்” என்றார்.