Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் நடைபெறும் காலநிலை கூட்டம்… இந்தியா புறக்கணிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

இந்தியா லண்டனில் நடைபெறும் காலநிலை கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் இரண்டு நாட்கள் நடைபெறும் ஐ.நா. பருவநிலை மற்றும் மாநாட்டின் தலைவர் தலைமையிலான அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 51 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா இந்த கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் தட்ப வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் 1.5 டிகிரி செல்சியஸூக்கு மேல் வெப்பநிலை அதிகரித்து விடாமல் தடுப்பதற்காக கிளாஸ்கோவில் அக்டோபர் மாதம் பருவநிலை மாற்றம் மாநாடு நடைபெற உள்ளது.

மேலும் காலநிலை மாற்றம் ஒப்பந்தம் தொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இறுதி முடிவானது எடுக்கப்படவில்லை. இந்தியா தரப்பிலிருந்து இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேப்பில்ஸில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் இந்தியா லண்டன் காலநிலை கூட்டத்திற்கு நேரில் சென்று கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், மெய்நிகர் நாட்டில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கலந்து கொள்ளவில்லை” எனவும் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் காரே தெரிவித்துள்ளார்.

Categories

Tech |