சிக்கிமின் உயரமான மலைப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்களும் சீன ராணுவத்தினரும் மோதலில் ஈடுபடும் காணொளி வெளியாகியுள்ளது
இந்தியாவின் எல்லைக்குட்பட்ட லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக 20 இந்திய வீரர்களும் 35 சீன ராணுவத்தினரும் மரணமடைந்ததாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் ராணுவத்தை குவித்துள்ளனர். அதோடு இரண்டு நாடுகள் இடையே ஒற்றுமையை மீண்டும் கொண்டுவர பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் சிக்கிமின் உயரமான மலைப்பகுதியில் இந்திய சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் உருவாகியுள்ளது.
இது தொடர்பான வீடியோ வெளியாகி, அதில் இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் மோதிக்கொள்வது பதிவாகியுள்ளது. ஐந்து நிமிடங்களுக்கு மேல் பதிவாகியுள்ள அந்த வீடியோவில் இரண்டு தரப்பு வீரர்களும் சண்டையிட இந்திய ராணுவ வீரர் ஒருவரால் சீனா அதிகாரிக்கு தாக்கப்படுகின்றார். அதோடு ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு “திரும்பிச் செல்”, “சண்டையிட வேண்டாம்” என இரண்டு தரப்பிலிருந்தும் சத்தம் போடுகின்றன ஆனால் இந்த காணொளி எப்போது படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிய வரவில்லை.