இந்திய ராணுவ வீரர்கள் தான் முதலில் விதியை மீறி எல்லை தாண்டியதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது
கடந்த 15ஆம் தேதி இந்தியாவின் எல்லைக்குட்பட்ட லடாக் பகுதியில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்களும் 45 சீன ராணுவத்தை சேர்ந்தவர்களும் உயிரிழந்த நிலையில், மோதலுக்கு சீன வீரர்களே காரணம் என இந்தியாவும், இந்திய வீரர்கள் அத்துமீறியதுதான் காரணம் என சீனாவும் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டு இரண்டு நாட்டு படைகளும் வாபஸ் பெறுவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதனிடையே சீனா தனது படைகளைக் லாடாக் எல்லை பகுதியில் குவித்துள்ளது செயற்கைக்கோள் மூலமாக படமாக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்திய வீரர்களே சர்வதேச விதிகளை மீறி முதலில் சீன ராணுவத்தினர் தாக்கியதாக கூறிய அந்நாடு, 15ஆம் தேதி இந்திய ராணுவ வீரர்கள் அவர்களின் எல்லைக்கு சென்று அந்நாட்டு வீரர்களின் முகாமை அளித்ததாக குற்றம்சாட்டி, எல்லையில் ஏற்பட்டிருக்கும் பதற்றம் தணிய இந்தியாதான் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகையில் “15ஆம் தேதி ஏற்பட்ட கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலுக்கு இந்தியாவே முழு பொறுப்பை ஏற்க வேண்டும். இந்திய வீரர்களை முதலில் விதியை மீறி செயல்பட்டனர். சீன ராணுவத்தினர் நீண்ட நாட்களாக கல்வான் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” எனக் கூறியுள்ளார் என தெரிவித்துள்ளார்