Categories
உலக செய்திகள்

எல்லையில் நடந்த பயங்கர சம்பவம்… கற்களால் தாக்கப்பட்ட வீரர்கள்… பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!!

இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களிடையே எல்லையில் ஏற்பட்ட பயங்கர மோதல் குறித்த வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.

இந்தியாவின் எல்லை பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ஆம் தேதி சீனா நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் கூடாரம் அமைக்க முயற்சித்த போது அதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுக்க முயன்றுள்ளனர். அப்போது இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதற்கிடையே சீனா தங்கள் ராணுவ வீரர்கள் 4 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக தெரிவித்தது.

ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் சீன ராணுவ வீரர் பலரும் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். மேலும் எல்லையில் கடந்த 1962-ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மோசமான தாக்குதல் இதுவே என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சிலர் ராணுவ கூடாரம் ஒன்றை நீக்க முயற்சித்த போது அவர்களுடன் சீன ராணுவத்தினர் மோதுவது போன்ற காட்சியும், இந்திய ராணுவத்தை நோக்கி கற்களை வீசுவது போலவும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

https://twitter.com/i/status/1422352477664464897

மேலும் சீன ராணுவம் அந்தத் தாக்குதலில் காயமடைந்த வீரர்களை குளிர்ச்சியான நீர் நிறைந்த கால்வான் நதியில் சிரமப்பட்டு தூக்கி செல்வது போன்ற காட்சிகளும் உள்ளது. சீன மற்றும் இந்திய நாடுகளுக்கிடையே எல்லை விவகாரத்தில் உடன்பாடு எதுவும் ஏற்படாத நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியாகி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Categories

Tech |