இந்தியா – சீனா மோதல் குறித்த முழுமையான விவரங்களை இன்று ராணுவம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எல்லைப் பிரச்சனை சம்பந்தமாக நிறைய தகவல்கள் திரட்ட வேண்டிய ஒரு சூழல் இருக்கிறது . ஏனென்றால் திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் என்பது நிகழ்ந்திருக்கிறது. நிறைய வீரர்கள் காணமால் போயிருக்கலாம் என்றும், நிறைய வீரர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றார்கள். எனவே இந்த தகவல்கள் அனைத்தும் ஒன்றாகத் திரட்டப்பட்டு வருகிறது. அதனால் இன்னும் ராணுவம் சார்பில் இன்னும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறாமல் இருக்கின்றது.
இன்று பிற்பகலில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடக்கலாம் அல்லது ராணுவம் சார்பில் மேலும் பல முக்கியமான செய்தி குறிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உயிரிழந்த மற்ற 17 பேர் யார் யார் ? என்ற தகவல்கள் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவிலும், இந்தியாவிலும் என்ன மாதிரியான சேதாரம் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நாடுகள் பலவும் இந்த விஷயத்தில் கவலை தெரிவித்து வரக்கூடிய நிலையில் உலக நாடுகளுக்கும் இந்தியா ஒரு முக்கியமான செய்தியை இன்றைய தினம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் அத்துமீறலை உலக அரங்கில் எடுத்துக்காட்டும் வகையில் செய்திக்குறிப்புகள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மொத்தத்தில் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக தெளிவான விவரங்களை நாட்டுமக்களுக்கு ராணுவம் இன்றைய தினம் செய்தி குறிப்பாகவோ அல்லது நேரடியாகவோ வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.