Categories
உலக செய்திகள்

இப்படி சண்டை போட்டுட்டு இருந்தா நல்லா இருக்காது… இந்தியா- சீனா இடையே 15 மணி நேரம் பேச்சுவார்த்தை…!!

லடாக் விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே கார்ப்ஸ் கமாண்டர்ஸ்  அளவிலான 9-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று 15 மணிநேரம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

லடாக் விவகாரத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி இந்தியா – சீனாவின் ராணுவ அலுவலர்கள் அளவிலான எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இந்நிலையில் 9வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. கிழக்கு லடாக்கில் சீன எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காலை 11 மணிக்கு கார்ப்ஸ் கமாண்டெர்ஸ் அளவிலான தொடங்கிய பேச்சுவார்த்தையானது இன்று அதிகாலை 2. 30 மணி வரை நடைபெற்றது.

சுமார் 15 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில்  இரு நாட்டு எல்லைகளிலும்  படைகளை விலக்குவது ,  பதற்றத்தை நீக்குவது, எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது போன்ற செயல்கள் குறித்து பேச்சவார்த்தை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் சீன படைகள் இந்திய ராணுவ படைகளை அத்துமீறி தாக்கியதால் இரு நாட்டு எல்லைகளிலும் படைகள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |