இந்தியா-சீனா நாடுகள் எல்லை பதற்றத்தை தணிக்கும் வகையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீனா தகவல் தெரிவித்துள்ளது.
சீனா தனது படைகளை கிழக்கு லடாக் எல்லையில் குவித்து ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் தனது படைகளை எல்லையில் குவித்துள்ளது. மேலும் இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 13 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் “இரு நாடுகளும் எல்லை பதற்றத்தை தணிக்கும் வகையில் இராணுவ மற்றும் தூதரகத்தின் மூலம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக” சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேச்சுவார்த்தையால் தற்போது இந்தியா-சீனா எல்லை பிரச்சனை பொதுவான நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.