எல்லையில் நிலவும் அமைதி இன்மையால் இந்திய சீன உறவு பாதிக்கப்பட்டு உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எல்லையில் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும் என தெரிவித்தார். இந்தியா-சீனா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கும் இதுதான் காரணம் எனக் கூறியவர் எல்லையில் அமைதியான சூழலை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறினார்.