Categories
உலக செய்திகள்

இந்தியா – சீனா எடுத்த திடீர் முடிவு….! ஏமாந்து போன ட்ரம்ப் …..!!

இந்தியா – சீனா நாடுகளிடையே அண்மையில் எல்லையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு சீன தூதர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இந்தியா – சீனா எல்லையோரம் கடத்த ஒரு வரமாக பரபரப்பு நீடிக்கின்றது. இரு நாடுகளும் தங்களின் எல்லையில் படைகளை குவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சீனா தூதர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வியாபாரம், முதலீடு போன்ற விஷயங்களிலும் ஒரு நாட்டு இன்னொரு நாடுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லை. இதனை பேச்சுவார்த்தை நடத்தி நாங்கள் தீர்த்துக் கொள்வோம் என்று சீன தூதர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் கருத்தை ஏற்கவில்லை:

இது தவிர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தான் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக சொல்லியிருந்ததை இரண்டு நாடுகளுமே ஏற்கவில்லை. ஆகவேதான் சீனா இந்த விஷயத்தில் ஏற்கனவே பிரச்சினை வந்த போது எப்படி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பட்டதோ அதே போலவே தீர்க்கப்படும் என்று சொல்லி இருக்கிறது. இந்தியா – சீனா எல்லை பிரச்சினை என்பதே கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.

பிரச்சனையை தீர்த்துக் கொள்ள முடியும்:

இதில் பெரும்பாலான பகுதிகளில் மலை பிராந்தியமாக உள்ள பகுதிகள், அதுவும் லடாக் பகுதி, காஷ்மீர் பகுதி, சிக்கிம், அருணாச்சல் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உத்தரகாண்ட் உள்ளிட்ட  மாநிலம் வரை எல்லையை நீள்வதால் வரையறுத்து வேலி அமைப்பது போன்ற விஷயங்களெல்லாம் அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஆகவேதான் இதுபோன்ற பிரச்சினை நடு நடுவே வந்து கொண்டிருக்கும் என்றும் ஆனால் அந்த பிரச்சனையை தீர்த்து விட முடியும் எனவும் இந்திய அதிகாரிகளும் நம்புகிறார்கள்.

பதற்றம் தணியும்:

அதே சமயத்தில் ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும் என்பதற்காக லடாக் பகுதியில் 5000 ராணுவ வீரர்களை சீனா குவிந்ததால் இந்தியாவும் அந்த பகுதியில் வீரர்களை அதிகரித்து,  ரோந்து பணிகள், கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருந்தது. நேற்று  இந்திய ராணுவ தளபதிகள் ஆலோசனை நடத்தினார்கள். இந்திய அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியும்   ஆலோசனை நடத்தினார். பிரச்சினையை முடிக்க வேண்டும் என்பது ஒருபக்கம் இருந்தாலும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று இன்னொரு பக்கம்  இந்திய அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் சீன தூதர் வெளியிட்டுள்ள அறிக்கை காரணமாக பதற்றம் தணிய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Categories

Tech |