Categories
தேசிய செய்திகள்

“இந்தியா என்றால் நினைவுக்கு வருவது ஊழல், மோசமான சாலைகள் மட்டும் தான்”….. இன்போசிஸ் நிறுவனர் ஸ்பீச்….!

ஆந்திர மாநிலம் விஜயநகர் மாவட்டத்தில் ராஜம் என்ற இடத்தில் ஜிஎம்ஆர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த கல்வி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, வாய்ப்பு தேடுபவர்கள் எங்கே இடைவெளி இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். நீங்களே உங்களை தலைவராக நினைத்துக் கொள்ளுங்கள். வேறு ஒருவர் தலைவர் பதவியை எடுத்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் என்ன உருவாக்குகிறீர்களோ அதுதான் நிஜம். அதன்பிறகு இந்தியா என்றால் நம் நினைவுக்கு வருவது மோசமான சாலைகள், சுற்றுச்சூழல், மின்சாரம் இல்லாதது மற்றும் ஊழல் போன்றவைகள் தான்.

ஆனால் சிங்கப்பூரை பொறுத்தவரை சுத்தமான சாலை, சுகாதாரமான காற்று போன்றவைகள் தான் நினைவுக்கு வரும். இந்த நல்ல சூழ்நிலையை உருவாக்குவது நம்முடைய கைகளில் தான் இருக்கிறது. இளைய சமுதாயத்தினர் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர முனைய வேண்டும். சுயநலத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நாட்டு மக்கள், சமுதாயம் மற்றும் தேசத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலும் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களின் பிள்ளைகள் யாரும் தற்போது தலைமை பொறுப்பில் இல்லாதது மிகவும் வேதனையாக இருக்கிறது என்றும் கூறினார்

Categories

Tech |