Categories
தேசிய செய்திகள்

”பூடான் பயணம் நிறைவு” இந்தியா வந்த பிரதமர்…..!!

இரண்டு நாட்கள் அரசு பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி இந்தியா திரும்பினார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு பயணமாக பூடான் சென்றார். அங்கு இரு நட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பூடான் தலைவர்களுடன் பேசிய பிரதமர் மோடி ,இந்தியா-பூடான் நாடுகளுக்கிடையே 50 ஆண்டு நீர் மின்சக்தி ஒத்துழைப்பு நினைவுவாக தபால்தலை வெளியீடு நிகழ்ச்சி, அங்குள்ள தலைவர்களுடன்  உயர்மட்ட கூட்டங்கள்,  அந்நாட்டு பிரதமருடன்  பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவுடன் 10 ஒப்பந்தங்கள் என அசத்தினார் பிரதமர் மோடி.

Image result for Modi is the Prime Minister of Bhutan

பின்னர் அங்குள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டு நாட்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இந்தியா திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்த பிரதமரை  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Categories

Tech |