இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக காணப்படுவதால் வங்காள தேச எல்லையை மூட வெளியுறவுத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார் .
இந்தியாவில் கொரோனா 2 வது அலை மிக வேகமாக பரவி வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. ஆகையால் மருத்துவமனைகள் அனைத்திலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து பயணம் செய்வதற்கான விமான போக்குவரத்து தடை விதித்துள்ளனர்.
மேலும் அதிகரித்துக்கொண்டே வரும் வைரஸ் அச்சுறுத்தலால் வங்காளதேசம் இந்தியாவுடனான எல்லையை மூட உத்தரவிட்டு உள்ளது.இந்த முடிவு குறித்து வெளியுறவுதுறை மந்திரி ஏகே அப்துல் மோமன் கூறியது “இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனவைரஸ் அச்சுறுத்தல் காட்டுத்தீ போல் பரவி வருவதால் 2 வாரங்களுக்கு எல்லை மூடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இரு நாடுகளுக்குயிடையேயான சரக்கு போக்குவரத்து வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் “கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவுடனான விமான போக்குவரத்து கடந்த 14ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.