இலங்கையில் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருப்பதால் அதனை கட்டுப்படுத்த, இந்திய படைகள் அனுப்பப்படும் என்று வெளியான தகவலுக்கு இந்திய தூதரகம் பதில் தெரிவித்திருக்கிறது.
இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்கிறது. அங்கு மக்களின் போராட்டம் புரட்சியாக வெடித்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து போராட்டத்தை கட்டுப்படுத்த படைகள் அனுப்பப்படும் என்று இலங்கையில் தகவல்கள் வெளியாகின. இது குறித்து இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவிலிருந்து படைகள் இலங்கைக்கு அனுப்பப்படும் என்று ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இவ்வாறு யுகத்தின் அடிப்படையில் வெளியாகும் செய்திகளை நாங்கள் உறுதியாக மறுக்கிறோம். இவ்வாறான அறிக்கைகளும், கருத்துக்களும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு எதிரானது என்று கூறியிருக்கிறார்.