முதல் முறையாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
உலக நாடுகளிடையே பரவத் தொடங்கிய கொரோனா தொற்று இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்த கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,985 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,76, 583 ஆக அதிகரித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,745க்கு உயர்ந்துள்ளது. அதோடு தொற்றிலிருந்து இதுவரை 1,35,206 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 1.33 லட்சம் பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இதனால் முதல்முறையாக நாட்டில் சிகிச்சை எடுத்து வருபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது. 86% தொற்று கடந்த 40 நாட்களில் பதிவாகி இருப்பதாக பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது. மேலும் 84 சதவீத நோயாளிகள் மே மற்றும் ஜூன் மாதங்களில் இடையில் மரணமடைந்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு மே மாதம் மிகவும் மோசமான மாதமாகவே அமைந்தது. 31 நாட்களில் ஒரு லட்சத்து 53 ஆயிரம் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
ஜூன் 1 முதல் நாட்டில் அமல்படுத்தப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு 9 நாட்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகியிருந்தது. ஐந்தாவதாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் மால்கள், உணவகங்கள் போன்றவை திங்கள் கிழமையிலிருந்து திறக்கப்பட்டுள்ளன. பல நிறுவனங்களும் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நேற்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 ஆயிரத்தை நெருங்கி 2.6 லட்சத்தை தாண்டியுள்ளது.
தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் பல நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுகையில் இந்தியா கொரோனா தொற்றை சிறந்தமுறையில் இந்தியா கையாண்டு வருகின்றது . இருந்தாலும் மக்களும் தொடர்ந்து எச்சரிக்கையாக இருந்து வருவதாக சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட தரவுகளின் அடிப்படையில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.