Categories
உலக செய்திகள்

இந்தியா பண்ணது பெரிய தப்பு… அதான் நாங்க தாக்கினோம் – சீனா

எங்கள் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா அத்துமீறி நுழைந்தது தாக்குதலுக்கான முக்கிய காரணம் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கடந்த திங்களன்று இரவு இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் லடாக் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் குறித்து சீன வெளியுறவுதுறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு சீன எல்லைக்குட்பட்டது. பல வருடங்களாக அங்கு பாதுகாப்பு பணியில் சீன வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை மீறி இந்தியா சாலை அமைத்து வருகின்றதாக ஏற்கனவே சீனா குற்றம்சாட்டி இருக்கிறது. அத்துமீறி இந்திய வீரர்கள் எல்லைக்குள் நுழைந்து கோபமூட்டும் செயல்களில் ஈடுபட்டது.

இதுவே தாக்குதலுக்கான முக்கிய காரணம். அனுமதி இன்றி எங்கள் எல்லையில்  நுழைந்ததால் இந்திய ராணுவ வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். இரண்டு நாட்டு அதிகாரிகள் இடையில் இரண்டாம் கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெறும். எல்லைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்” என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |