இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் மற்றும் 3 சர்வதேச டி20 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் ஒருநாள் போட்டி வருகிற ஜூலை 13ம் தேதி, 2 வது போட்டி ஜூலை 16ம் தேதி மற்றும் 3 வது போட்டி ஜூலை 18-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதன்பிறகு முதல் சர்வதேச டி20 போட்டி ,வருகிற ஜூலை 21 ம் தேதி ,2 வது போட்டி ஜூலை 23 மற்றும் 3 வது போட்டி ஜூலை 25 ஆகிய நடைபெற உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தலைமையில், இந்திய அணிக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற வீரர்கள் இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.