Categories
உலக செய்திகள்

மோதலில் ஈடுபட்ட வீரர்கள்…. அத்துமீறி நுழைந்த சீனா ராணுவம்…. சமாதானம் செய்த இரு நாட்டு தளபதிகள்….!!

சீனா ராணுவம் இந்தியா எல்லைப்பகுதியில் அத்துமீறி நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனா ராணுவம் கடந்த வாரம் இந்தியா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. அதாவது சுமார் 200  சீனா ராணுவ வீரர்கள் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் பகுதியில் இந்திய இராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த தகவலை இந்தியா ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த இரு தரப்பும் மோதலில் எவருக்கும் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிலும் லாடக் கிழக்கு பகுதியின் எல்லை பிரச்சினைக்கு இந்தியா மற்றும் சீனாவில் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரு நாட்டு ராணுவ வீரர்களும் உண்மையான எல்லைப்பகுதியில் வெகு நேரம் குவிந்துள்ளனர்.

இதனையடுத்து இரு நாட்டு எல்லைப் பகுதியின் ராணுவ தளபதிகளும் சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர். இதன் பின்னர் தான் இரு நாட்டு ராணுவ வீரர்களும் கலைந்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் நடந்த இச்சம்பவத்தை ராணுவ வட்டாரம் தற்பொழுது தான் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |