இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 2வது ஒருநாள் போட்டியில், இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை எடுத்துள்ளது.
புனேவில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது, இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது . இந்தப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் தவான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் பேட்டிங் செய்த தவான் 4 ரன்களிலும் ,ரோகித் ஷர்மா 25 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பின் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி மற்றும் ராகுல் சிறப்பாக விளையாடினர்.
இதில் இந்திய கேப்டன் விராட் கோலி 66 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து பண்ட் களமிறங்கினார். பண்ட் -ராகுல் ஜோடி இணைந்து சிறப்பாக விளையாடி, பண்ட் அரைசதம் அடிக்க ,மறுமுனையில் ராகுல் சதம் அடித்து ரன்களை குவித்தனர். இதில் ராகுல் 108 ரன்களில் வெளியேற, அடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். பண்ட் – ஹர்திக் பாண்டியா ஜோடி அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை எடுத்துள்ளது. சிறப்பாக விளையாடிய பண்ட் 77 ரன்களும், ஹர்திக் பாண்டியா 35 ரன்களும் எடுத்தனர். இந்த தொடரில் இந்திய அணி சுமார் 14 சிக்சர்களை அடித்து விளாசியது.இதில் பண்ட் 7 சிக்சர் ,ஹர்திக் பாண்டியா 4 சிக்ஸர்கள் அடித்தனர்.