இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை நேரில் காண 100 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியை காண்பதற்கு 100 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பிரதமர் கூறும்போது ,”இந்த போட்டிக்கு முன்பாக ஜூலை 19-ஆம் தேதியுடன் இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து அடுத்த வாரத்தில் முடிவெடுக்கப்படும் “என்றும் பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். அதேசமயம் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அந்நாட்டு மக்களை பிரதமர் எச்சரித்துள்ளார்.