மும்பையில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்,இந்திய அணியில் புதுமுக வீரர்களான பிரசித் கிருஷ்ணா, குர்ணல் பாண்ட்யா இருவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டியில், இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. எனவே இந்த இரு அணிகளும் மோதிக் கொள்ளும் 5வது 20 ஓவர் போட்டி நேற்றுடன் முடிவடைகிறது. இதற்கடுத்து மூன்று நாள் ஆட்டம் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றனர். இந்த மூன்று நாள் ஆட்டம் புனேவில் நடைபெற உள்ளது. இந்த மூன்று நாள் தொடர் போட்டிகள் வருகின்ற 23 தேதி முதல் போட்டி, 26தேதி இரண்டாவது போட்டி மற்றும் 28தேதி மூன்றாவது போட்டி ஆகிய 3 தேதிகளில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்காக இந்தியாவில் 18 பேர் கொண்ட அணியின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் புதுமுக வீரர்களான வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ,ஆல்ரவுண்டரான குர்ணல் பாண்ட்யா வாய்ப்பு வழங்கப்பட்டது. இதேபோன்று சூர்யகுமார் யாதவ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் இருவரும் இப்போட்டியில் விளையாட உள்ளனர். இந்நிலையில் தன்னுடைய திருமணத்திற்காக விடுமுறையில் உள்ள வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இப்போட்டியில் பங்கு பெறவில்லை. இவ்வாறு இந்திய அணியில் கேப்டன் விராட்கோலி தலைமையில்புதுமுக வீரர்கள் உட்பட 18 பேர் இடம்பெற்றுள்ளனர்.இந்த போட்டிகள் புனேவில் நடைபெற உள்ளது .