இந்தியாவின் ஏற்றுமதி உற்பத்தி கடந்த நிதி ஆண்டில் ரூ.31 லட்சம் கோடி உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதியை கடந்த 2021- 2022 நிதி ஆண்டில் (ரூ.30 லட்சம் கோடி) 400 பில்லியன் டாலராக உயர்த்த குறிக்கோள் தீர்மானிக்கபட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து நிதி ஆண்டு முடிவதற்கு இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில் கடந்த மாதம் 23 ஆம் தேதியே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டப்பட்டது.
இந்த நிலையில் கடந்த நிதி ஆண்டு முடிவடைந்த நிலையில் ஏற்றுமதி (ரூ.31 லட்சத்து 35 ஆயிரம் கோடி) 418 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதற்கு மத்திய அரசு பெட்ரோலியம், இன்ஜினியரிங் பொருட்கள், நகை, ரசாயனம், ரத்தினங்கள் ஆகிவற்றின் ஏற்றுமதி அதிகமாக இருந்தது தான் காரணம் என்று கூறியுள்ளது.