Categories
உலக செய்திகள்

இந்தியா-ஜெர்மன் இடையே விமானபோக்குவரத்தில் மாற்றம்.. ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய கட்டுப்பாடுகள்..!!

இந்தியா மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கிடையேயான விமான போக்குவரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக Lufthansa விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது வரை, இந்தியா மற்றும் ஜெர்மனுக்கு இடையில் நேரடியான போக்குவரத்து இல்லை. மாறாக, ஜெர்மனியில் இருந்து இந்தியா செல்லக்கூடிய விமானங்கள் மற்றும் இந்தியாவிலிருந்து ஜெர்மனி செல்லக்கூடிய விமானங்களும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று வேறு விமானத்தில் பயணிகள் மாற்றப்படுவது தான் வழக்கத்தில் இருந்தது.

எனினும் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்திருப்பதால் ஐக்கிய அரபு அமீரகம் சில விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. எனவே இனிமேல் இந்தியா மற்றும் ஜெர்மனிக்கு இடையே பயணிக்கும் விமானமானது பஹ்ரைனிற்கு சென்று அங்கு தான் பயணிகள் விமானம் மாறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |