Categories
தேசிய செய்திகள்

எங்க நாட்டுக்கு அனுப்பி வைங்க… பாகிஸ்தானுக்கு உதவிய இந்தியா..!

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இந்தியாவில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டினர் பாகிஸ்தான் திரும்ப இந்தியா உதவியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக  ஏப்ரல் 14 ஆம் தேதிவரை இந்தியா முழுவதும் அமல்படுத்தியிருந்த ஊரடங்கு உததரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஆகிய பகுதிகளில் சிக்கியிருக்கும் 41 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் நாடு திரும்புவதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து அதனை  உடனடியாக கருத்தில் கொண்டு இந்திய தூதரகம் பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று அவர்கள் நாடு திரும்புவதற்கு உடனடி ஏற்பாடு செய்துள்ளது. இந்திய – பாகிஸ்தான் எல்லையான பாஞ்சாபில் இருக்கும் அட்டாரி-வாகா எல்லை பகுதிக்கு அவர்கள் அனைவரும் அழைத்துவரப்பட்டு, சொந்த நாடு திரும்ப உதவி மேற்கொண்டுள்ளது இந்திய தூதரகம்.

அதன் தொடர்சியாக பாகிஸ்தானில் இருக்கும் இந்திய நாட்டினர் 250 பேரை தாயகம் அழைத்துவரும் முயற்சியில் இந்தியா களமிறங்கியுள்ளது. இதில் 150 பேர் மாணவர்கள் என்றும், 100 பேர் சுற்றுலா சென்றவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |