அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் பிரைஸ் இந்தியா ரஷ்யாவை சார்ந்திருப்பதை குறைத்துக் கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தினுடைய செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் ப்ரைஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின் மீது போர் மேற்கொண்டு வரும் ரஷ்யா ஆற்றலிலும் பாதுகாப்பு உதவியிலும் நம்பகத்திறன் உள்ள நாடு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் நாட்டின் நலனை இந்தியா கருத்தில் கொண்டிருக்கிறது. எனவே தான் ரஷ்ய நாட்டை அதிக சார்ந்திருப்பதை குறைத்துக் கொண்டு வருகிறது. ஆனால் அது இந்திய நாட்டின் தனிப்பட்ட இரண்டு தரப்பிற்கான விவகாரம். இந்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்ட போது தெரிவித்த கருத்துக்களும், ஐநாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகளும் ஒரே நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றன.
இது போருக்குரிய சகாப்தம் கிடையாது என்று மோடி தெளிவாக கூறியிருந்தார். எனவே, இந்த போரை எதிர்த்து தங்களின் நிலைப்பாட்டை மீண்டும் இந்தியா உறுதியாக தெரிவித்து இருக்கிறது. பேச்சு வார்த்தை மூலமாக போரை நிறுத்த தூதரக முறையில் இந்தியா விருப்பம் தெரிவிக்கிறது.
சமூகம், அரசியல், தூதரகம் மற்றும் பொருளாதாரத்தில் வலிமை மிகுந்த நாடான இந்தியாவிடமிருந்து இவ்வாறான தகவலை ரஷ்யா கேட்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.