Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் : இந்தியாவில் இதுவரை 13 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் கொரோனா பரவலை தடுக்கலாம் என்றாலும், அந்த பரவல் தடுக்கப்பட சில நாட்கள் ஆகும். குறைந்த பட்சம் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில்  கொரோனா வைரசால் 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியர்கள் 602 பேர், வெளிநாட்டினர் 47 பேர் என 649 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது

மேலும் பலி எண்ணிக்கையும் 10ல் இருந்து 13 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேரும், கேரளாவில் 118 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அதே சமயம் 43 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது. 

Categories

Tech |