இந்தியா இலங்கை கடற்படைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
இந்தியா இலங்கை கடற்படைகளுக்கு இடையே சிலின்நெக்ஸ்ட் 20 என்ற பெயரில் இரு தரப்பு கூட்டுப்பயிற்சி இலங்கையின் திருகோணமலைக்கு அருகே அக்டோபர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் இலங்கை கடற்படை சார்பில் எஸ்.எல்.என். சயூரா என்ற ரோந்து கப்பலும் கஜபாகு என்கிற பயிற்சி கப்பலும் கலந்து கொள்கின்றனர். இந்திய கடற்படை சார்பில் நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கும் ஐஎன்எஸ் கபூர்தா என்.எஸ் கில்டன் ஆகிய போர்க்கப்பல்கள் கிழக்கு மண்டல கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் சஞ்சய் வித்சயன் தலைமையில் கலந்து கொள்கின்றன.
இது தவிர இந்திய போர்க் கப்பல்களில் இருக்கும் நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் சேத்தக் ரக ஹெலிகாப்டர்கள் கடற்படையின் டோர்னியர் ரோந்து விமானம் ஆகியவையும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.