மிகச்சிறந்த சுற்றுலா தளமாக விளங்கும் சிங்கப்பூருக்கு அதிகம் செல்லும் சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
உலகின் பல நாடுகளில் அழகிய சுற்றுலா தளங்கள் பல இருக்கின்றது. எனினும், சிங்கப்பூர் தான் பெரும்பாலான மக்களை கவரும் வண்ணம் சுற்றுலாவிற்கு என்றே படைக்கப்பட்ட சொர்க்க பூமியாகவே பார்க்கப்படுகிறது. அங்கு மனதிற்கு புத்துணர்ச்சி தரக்கூடிய வகையில் அழகான பல இடங்கள் அமைந்திருக்கின்றன.
எனவே, பிற நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு நாளும் சிங்கப்பூரில் குவிந்து வருகிறார்கள். இந்நிலையில், அந்நாட்டிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவைச் சேர்ந்த 2,19,000 சுற்றுலா பயணிகள் சிங்கப்பூருக்கு சென்றிருக்கிறார்கள்.