இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை 137ஆக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 147ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 147பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 122 பேர் இந்தியர்கள், 25 பேர் வெளிநாட்டினர்கள் ஆவர்.
கேரளா – 25 (வெளிநாட்டினர் – 2), மகாராஷ்டிரா- 38 (வெளிநாட்டினர் – 3), உ.பி.-15 (வெளிநாட்டினர் – 1), டெல்லி – 8 (வெளிநாட்டினர் – 1), கர்நாடகா – 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் லடாக் – 8, ராஜஸ்தான் -2 (வெளிநாட்டினர் – 2), தெலுங்கானா – 3 (வெளிநாட்டினர் – 2), தமிழ்நாடு -1, ஜம்மு & காஷ்மீர் – 3, பஞ்சாப் -1, ஹரியானா – 2, (வெளிநாட்டினர் -14), ஆந்திரா – 1, ஒடிஷா – 1, உத்தரகண்ட் – 1, பெங்கால் – 1 என மொத்தம் 147 பேருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Ministry of Health and Family Welfare: Total number of confirmed #COVID19 cases in India rises to 147 – comprising 122 Indian nationals and 25 foreign nationals (as on 18.03.2020 at 09:00 AM) pic.twitter.com/Lzw64idp5F
— ANI (@ANI) March 18, 2020
மேலும் 14 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று குணமாகியுள்ளனர். இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவில், வணிக வளாகங்கள், மால்கள், தியேட்டர்கள், பார்க், டாஸ்மாக் என மக்கள் கூடும் இடங்களை மூட உத்தரவிட்டுள்ளனர். அதேபோல பல்வேறு நிறுவனங்களும் மூடப்பட்டு வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.