Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியா இந்துக்களின் நாடு… இந்து இல்லனு யாரும் சொல்ல முடியாது.. பிரேமலதா அதிரடி கருத்து …!!

தேமுதிக தொடங்கி 18ஆம் ஆண்டு தொடக்க விழாவில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதாவிடம், நாமெல்லாம் ஹிந்துக்கள் கிடையாது என்ற விவாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று திமுகவின் ஆ.ராசா பேசியது பற்று கூறிய பிரேமலதா, இந்துக்கள் கிடையாது என்றால் இது இந்துக்கள் நாடு தான். எனவே ஹிந்துக்கள் கிடையாது என யாரும் சொல்ல முடியாது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை பொருத்தவரைக்கும் ஜாதி, மதம், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு, அத்தனை பேரும் ஒரே குலம் என்று லட்சியத்தோடு ஆரம்பிக்கப்பட்ட கட்சி இது.

தேமுதிகவின் வரலாறை நீங்கள் பார்த்தீங்கன்னா, இதுவரைக்கும் தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இல்லாத ஒரு வரலாறு, ஏனென்றால் எந்த கட்சியில் இருந்தும் நாங்க பிரிஞ்சு வரல, எந்த ஜாதியை வைத்து இந்த கட்சி கிடையாது, எந்த மதத்தை வச்சு கிடையாது, மொழியை வச்சு கிடையாது, தெய்வத்தின் துணையோடும், மக்கள் ஆதரவோடும், நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி. அதனால் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது தேமுதிக

தேமுதிகவும், பாமகவும் ஒரே கூட்டணியில் இடம்பெறுவது குறித்து நீங்கள் எப்படி பாக்குறீங்க ? ஏதேனும் நிபந்தனை விதிப்பீங்களா ? என்ற கேள்விக்கு, இப்போ கூட்டணி பற்றிய சிந்தனைக்கே நாங்க போகவில்லை. அதுக்கு தான் சொல்றேன், இன்னும் ரெண்டு வருடம் இருக்கு. எங்களை பொருத்தவரைக்கும் தேமுதிக வளர்ச்சி தான். அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் தமிழகத்தில் 3 கட்சி தான் அது தேமுதிக, அதிமுக, திமுக.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கிராமத்திலும், அங்குள்ள கிளையிலும் பூத்த அமைப்போடு, கட்டமைப்போடு இருக்கின்ற கட்சியாக நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். அதனால எங்கள் கட்சியினுடைய வளர்ச்சி,  எங்கள் கட்சியை எப்படி கொண்டு போகணும்னு ? என தான் எங்களின் முழு கவனமும் இருக்கிறது. அதனால் கூட்டணி பற்றிய பதில்களை உரிய நேரம் வரும் போது,     தேர்தல் நேரத்தில் நாங்கள் சொல்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |