Categories
உலக செய்திகள்

துணிந்து முடிவெடுத்த இந்தியா…. பின்பற்றிய அமெரிக்கா…. புலம்பும் சீனா …!!

சீனா தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹுவேய், ZTE  ஆகையவற்றிடம் இருந்து தொழில்நுட்ப சாதனங்களை வாங்க அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது

அமெரிக்கா முழுவதும் உள்ள தொலைத்தொடர்பு கட்டமைப்புகளை எப்.சி.சி (Federal Communications Commission) எனப்படும் தொலைத் தொடர்பு ஆணையம் ஒழுங்குபடுத்துகிறது. இந்நிலையில் அமெரிக்க தொலைத்தொடர்பு பணிகளில் ஹுவேய் மற்றும் ZTE  சாதனங்களை பயன்படுத்த FCC ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது. சீன ராணுவம் மற்றும் சீனாவின் உளவு நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதால், இந்த இரண்டு நிறுவனங்களிலிடமிருந்தும் தொலைத்தொடர்பு சாதனங்களை வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் ஆபத்து இருப்பதால் ஹுவேய் மற்றும் ZTE  நிறுவனம் சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெடரல் தொலைத் தொடர்பு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால் சீனாவின் ஹுவேய் மற்றும் ZTE  நிறுவனங்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 63 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதிரொலியாக 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்த அடுத்த நாளே அமெரிக்கா ஹுவேய் மற்றும் ZTE  தொலைத்தொடர்பு நிறுவன  சாதனங்களுக்கு பயன்பாட்டிற்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |