இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல நிம்மதி அளிக்கும் வகையில் குணமடைந்தவர்கள் வீதமும் அதிகரித்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு இந்த மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகின்றது. மொத்த பாதிப்பு 96,169ஆக உயர்ந்துள்ளது. அதே போல 36 ஆயிரத்து 824பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 33,053 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு 1198 பேர் உயிரிழந்த நிலையில் 7,688 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
குஜராத் – 11,379 : குணமடைந்தோர் – 4,499 ; இறப்பு – 659
தமிழ்நாடு – 11,224 : குணமடைந்தோர் – 4,172 ; இறப்பு – 78
டெல்லி – 10,054 : குணமடைந்தோர் – 4,485 ; இறப்பு – 160
ராஜஸ்தான் – 5,202 : குணமடைந்தோர் – 2992 ; இறப்பு – 131
மத்திய பிரதேஷ் – 4,977 : குணமடைந்தோர் – 2,403 ; இறப்பு – 248
உத்தர பிரதேஷ் – 4259 : குணமடைந்தோர் – 2,441 ; இறப்பு – 104