Categories
அரசியல்

“தென்படும் அறிகுறிகள்” அழிவை நோக்கி செல்லும் இந்தியா…. தா.பாண்டியன் எச்சரிக்கை…!!

சிறிது சிறிதாக சர்வாதிகாரத்திற்கு பலியாகி வரும் சூழல் இந்தியாவில்  ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இவ்வாறு கூறினார், எவ்வளவோ நெருக்கடிகளை எல்லாம் உலக நாடுகள் சந்தித்திருக்கிறது. பல நாடுகள் ராணுவத்திற்கு அடிமையாகிவிட்டது.  அண்டை நாடுகளே ராணுவ அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு தான் இருந்தது உதாரணமாக மியான்மர் பாகிஸ்தான் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ படுகொலைகளுக்கு ஆளாகியிருந்தது.

இந்தியா ஒன்றுதான் குறைபாடுகள் கொடுமைகள் இருந்தபோதும் ஜனநாயக முறை நடைமுறையில் இருந்து  கொண்டிருக்கிறது என்று கூறிய அவர், இந்தியா சர்வாதிகாரத்திற்கு பலியாக வில்லை ஆனால் ஆகக்கூடிய ஆபத்தின் அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெரிகிறது.

எனவே அதனை பாதுகாப்பதற்கு இந்த ஆண்டில் இதயத்திலிருந்து கட்டாயம் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த உறுதிமொழியை அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் இந்தியனாக பிறந்த ஒவ்வொரு குடிமகனும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |