Categories
தேசிய செய்திகள்

இந்தியா மக்களால் உருவாக்கப்பட்டது, நிலத்தால் அல்ல.. காஷ்மீர் விவகாரம் குறித்து ராகுல் காந்தி ட்விட்..!!

இந்திய நாடு அதன் மக்களால் உருவாக்கப்பட்டது, நிலத்தால் அல்ல என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்தை  நீக்க கோரிய மசோதா நேற்று மாநிலங்களவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று இம்மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு இது குறித்த விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Image result for rahul gandhi

தற்போது இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்திய நாடானது அதன் மக்களால் உருவாக்கப்பட்டதே தவிர நிலத்தால் உருவாக்கப்பட்டது அல்ல என்று காஷ்மீர் விவகாரத்தில் தனது மவுனத்தை கலைத்து ராகுல் காந்தி  கருத்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |