செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, இப்போது புதிதாக நாம் போடுகின்ற சட்டை, வேஷ்டி, போகின்ற கார் இதெல்லாம் கம்பேர் பண்ணுவது தான் புதிதாக ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது நான் கட்டியிருக்கக்கூடிய வாட்ச் ரஃபேல் விமானம். ரஃபேல் விமானம் இந்தியா ஆர்டர் செய்யும் போது அந்த ரஃபேல் விமானத்தின் உடைய பாகங்கள், வைத்து 500 வாட்ச் செய்தார்கள். அது வந்து ஒரு ஸ்பெஷல் எடிஷன். அந்த வாட்சினுடைய பெயர் ரஃபேல் ஸ்பெஷல் எடிசன். அந்த ரஃபேல் விமானத்தில் என்ன எல்லாம் பாகங்கள் இருக்கிறதோ, நான் கட்டிருக்க கூடிய வாட்சில் அந்த பாகங்கள் இருக்கிறது.
எனக்கு ரஃபேல் விமானத்தை ஓட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை, நான் ஒரு பெரிய தேசியவாதி. ரஃபேல் விமானத்தை ஓட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. அதனால், அந்த ரஃபேல் விமானத்திற்கு பக்கத்தில் இருக்கக்கூடிய இந்த வாட்சை கட்டியிருக்கிறேன். என்னுடைய வாட்ச் 500 வாட்ச் செய்யப்பட்டதில் 149 வது வாட்ச். இதை பார்த்தாலே தெரியும் ரஃபேல் என்று இருக்கும். டஸாலட் ஏவியேசன் அவர்கள் தான் ரஃபேல் விமானத்தை செய்கிறார்கள்… அந்த ரஃபேல் விமானத்தின் உடைய பாகங்களில் இந்த வாட்ச் செய்யப்பட்டது. உலகத்தில் 500 வாட்ச் தான் இருக்கிறது. அதனால் என் உடம்பில் உயிர் ஓடுகின்ற வரை இந்த வாட்ச் என்னிடம் இருக்கும். இது உலகம் முழுவதும் சேர்ந்து கலெக்ஷன் எடிஷன்.
ரஃபேல் விமானத்தின் வாட்சை நம்மளை தவிர வேறு யார் வாங்குவார்கள். இந்தியன் தான் வாங்க முடியும். அதனால் நம்முடைய நாட்டிற்காக ரஃபேல் விமானத்தில் இருக்கக்கூடிய பாகங்களில் இருந்து செய்யப்பட்ட அதே நிறுவனம் டஸாலட் ஏவியேசன் செய்த பாகங்கள் இருக்க கூடிய… வாட்ச் கட்டியிருக்கிறேன். ஏனென்றால் நான் தேசியவாதி, நான் பிரிவினை பேசுபவன் கிடையாது, நான் தேசியவாதி. ரஃபேல் நம் நாட்டிற்கு கிடைத்திருக்கக்கூடிய பொக்கிஷம், மிகப்பெரிய பொக்கிஷம்.
ரஃபேல் விமானம் வந்ததற்கு பிறகு ரூல்ஸ் ஆஃப் வார் மாறியிருக்கிறது, சைனாகாரனிடம் ஏன் இவ்வளவு தூரம் பேசுகிறோம் என்றால் ரூல்ஸ் ஆப் வார் மாறி இருக்கிறது. இந்தியாவினுடைய ரீச் substantial போயுள்ளது. இன்றைக்கு திரும்ப அதே பழைய விஷயத்தை நீங்கள் மறுபடியும் கேட்கிறீர்கள், என்றால் ? அது தனி சப்ஜெக்ட். அவர் என் வாட்சை பற்றி கேட்டார், வாட்ச் என்ன ? என்ன கம்பெனி ? டஸாலட் ஏவியேசன் ? ரஃபேல் என்கின்ற வார்த்தை போட்டிருக்கும். இந்த வாட்சில் ரஃபேல் விமானம் இருக்கும்.
மொத்தம் 500 வாட்ச் தான். அதில் 149 வாட்சை நான் கட்டி இருக்கிறேன். இது தனி சப்ஜெக்ட். இது தனிப்பட்ட விஷயம். எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன். நீங்கள் திரும்ப அதே குற்றச்சாட்டை கேட்கிறீர்கள்… ஆனால் நீங்கள் பார்ப்பீர்கள்? ரஃபேல் விமானம் முதல் விமானம் வந்துவிட்டது. அதனுடைய பயன்பாட்டை பாருங்கள், ரூல்ஸ் ஆஃப் ஃவாரை பாருங்கள். இது இந்தியாவின் எதிரிகள் இந்தியாவிற்குள்ளே இருக்கிறார்கள், சில கட்சிக்குள் ஊடுருவி இருக்கிறார்கள், சைனாவினுடைய ஏஜெண்டாக இருக்கிறார்கள், பாகிஸ்தானுடைய ஏஜெண்டாக இருக்கிறார்கள். அவர்கள் குறிப்பாக defence தன்னிறைவு பெறக்கூடாது என்பதற்காக வெளிநாட்டின் உடைய ஒற்றர்களை போல நாட்டில் இருந்து பேசுகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பதில்.. இந்தியா முதல் மாதிரி இல்லை. இது மோடிஜியினுடைய இந்தியா, அடித்தால் திருப்பி அடிக்கக்கூடிய இந்தியா தான் என்னுடைய பதில் என தெரிவித்தார்.