இந்தியா நெருப்புடன் விளையாடி வருகின்றது என்று பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.மேலும் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு உலக நாடுகளிடம் ஆதரவு கேட்கும் முயற்சியில் தொண்டர்ந்து ஈடுபட்டு வருகின்றது பாகிஸ்தான்.
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் அதிபர் ஆரிப் ஆல்வி , செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,காஷ்மீர் சிறப்பு அந்தஸதை நீக்கியதால் காஷ்மீர் மேம்படும் என இந்தியா நினைத்தால் அது முட்டாள்தனம்.இந்த விவகாரத்தில் இந்தியா தீவிரவாதத்தினை ஊக்குவித்ததோடு இந்தியா நெருப்புடன் விளையாடி வருகிறது.காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் அமர்ந்து பேசுவதற்கும் இந்தியா மறுத்து விட்டது என்றும் அவர் தெரிவித்தவுள்ளார்.