திமுக அமைச்சர் கீதா ஜீவன் ஒரு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பற்றி மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கு தற்போது பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தின் அமைச்சர் கீதா ஜீவன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியதோடு சூடு, சொரணை இருந்தால் என் தலைவர் பற்றியும், அவர் குடும்பத்தை பற்றியும் பேசுவதை நிறுத்திக் கொள். இல்லையெனில் நீ பேசிக் கொண்டிருக்கும் போதே மேடையில் ஏறுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
அதிகார மமதையில் ஒரு அரசியல் கட்சித் தலைவரை மேடையில் ஏறி மிரட்டுவோம் என்று ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் கூறி இருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதை நிரூபிக்கிறது. தமிழகத்தின் சட்ட-ஒழுங்கு சீர்குலைவுக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தான் காரணம். ஏற்கனவே சில அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மிரட்டல் விடுத்த நிலையி,ல் தற்போது பெண் அமைச்சர் ஒருவரும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையும் தமிழக காவல்துறை கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. அதன் பிறகு சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய அமைச்சர் கீதா ஜீவன், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசி உள்ளதால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதோடு, கைது நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இல்லையெனில் நான் சவால் விடுகிறேன்.
அண்ணாமலை அவர்களை எந்த இடத்தில் அவர் மிரட்டினாரோ அதே மேடையில் பாஜக பொதுக்குழு கூட்டம் நடத்தி தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல், முறைகேடுகள், அராஜகம் பற்றி மக்களிடம் சொல்வோம். அமைச்சர் கீதா ஜீவன் தோனியில் சொல்ல வேண்டும் என்றால் திமுகவுக்கு சூடு, சொரணை இருந்தால், தைரியம் இருந்தால் மேடை ஏறி பார்க்கட்டும். திமுக ஆள்வது தமிழக மாநிலத்தை. ஆனால் பாஜக ஆள்வது இந்திய நாட்டை. இதை ஒருபோதும் திமுக மறந்துவிட வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.