இந்திய அணியை போல நம் அணியும் ஒரு நாள் உலகை வெல்லும் என்று பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று தொடர்ந்து இரண்டு தொடர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு என்ன காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்திய அணி தற்போது உலகின் டாப் அணியாக திகழ்கிறது.
இந்தியா அடிப்படை கிரிக்கெட் கட்டமைப்பை வெளிப்படுத்தியதால் இன்று டாப் அணியாக திகழ்கிறது. நம்மிடமும் நிறைய திறமைகள் உள்ளது. நம் அணியும் ஒரு நாள் இந்தியாவைப் போல் உலகத்தை வெல்லும் அணியாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது நம்மிடம் இருக்கும் கிரிக்கெட் கட்டமைப்பு வலுவடைந்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் இதன் பலன் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.
உண்மையைக் கூறவேண்டும் என்றால்,என்னால் கிரிக்கெட்டை கவனிக்க முடியவில்லை. அதற்கான நேரமும் என்னிடம் இல்லை. இருப்பினும் அதன் அடிப்படை கட்டமைப்பு மாற்றப்பட்டுள்ளதால் நம் அணியும் மூன்று ஆண்டுகளில் முன்னேற்றம் அடையும் என்று கூறினார்.