அடுத்து நடைபெறும் போட்டியில் இந்திய அணி பிளெயிங் லெவனில் மாற்றம் செய்ய வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் ‘சூப்பர் 12’ சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது. ஆனால் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்தது .இது இந்திய அணி பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்திய அணி பவுலர்கள் யாரும் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை இதனால் இந்திய அணியின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் இந்திய அணி பிளெயிங் லெவனில் மாற்றம் செய்ய வேண்டுமென்று கிரிக்கெட் நிபுணர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். குறிப்பாக அணியில் உள்ள 3 வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை அணியில் களமிறக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர் . அதன்படி முதலில் ஹர்திக் பாண்டியாவை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ஷர்துல் தாகூரை அணியில் சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் ஹர்திக் பாண்டியா தற்போது பவுலிங் செய்யாமல் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார் .அதேசமயம் பேட்டிங்கிலும் பெரிய அளவில் அவரால் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூரை அணியில் சேர்ப்பதன் மூலமாக பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் கை கொடுப்பார் என கூறப்படுகிறது .அடுத்ததாக புவனேஷ்வர் குமாருக்கு பதில் இஷான் கிஷனை அணியில் சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர் .ஏனெனில் அவர் பயிற்சி ஆட்டத்திலும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அடுத்ததாக வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக முன்னணி வீரர் அஸ்வினை அணியில் சேர்த்தால் இந்திய அணி கூடுதல் பலம் பெறும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இதனால் இந்த மாற்றங்களை இந்திய அணி செய்தால் நிச்சயம் வெற்றி பாதைக்கு திரும்பும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்