Categories
கால் பந்து விளையாட்டு

இந்திய கால்பந்து வீரர்…. அனிருத் தபாவுக்கு கொரோனா …!!!

இந்திய கால்பந்து அணி வீரர் அனிருத் தபாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் ,இந்திய அணி  விளையாடி வருகிறது. இதில் அணியில் இடம் பெற்ற வீரர்களுக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் நடுகள வீரரான , 23 வயதான அனிருத் தபாவுக்கு  கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனால் அவர் ஹோட்டலின் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணி தனது அடுத்த லீக்  போட்டியில் நாளை வங்காளதேச அணியுடன் மோதுகிறது .அதன்பின் வருகின்ற 15ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோத உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட அனிருத் தபா , இந்த 2  போட்டிகளிலும்  பங்கேற்க முடியாது.

Categories

Tech |