Categories
விளையாட்டு ஹாக்கி

‘இந்திய மகளிர் அணி ஜெயிச்சதும்’ …. துள்ளிக்குதித்த கமெண்டேட்டர் …. வைரலான வீடியோ ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்குள் நுழைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது .

ஜப்பான் தலைநகர் டோக்கியோ 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி ,ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அத்துடன் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் இந்த போட்டியை  வர்ணனை செய்து கொண்டிருந்த வர்ணனையாளர்கள்  மகளிர் அணி வெற்றி பெற்றவுடன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |